UIDAI புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது இனி நம்முடைய ஆதார் கார்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதனை குடும்ப தலைவர்களே ஆன்லைன் மூலமாக செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. இதன் மூலமாக குடும்ப தலைவர்கள் இனி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாருக்காவது ஆதார் படிவத்திற்கான படிவங்கள் ஏதாவது இல்லை என்றால் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி ஆதார் அட்டையில் சேர்த்துக் கொள்ள முடிகிறது. இதனை சேர்ப்பதற்கு குடும்ப தலைவர்களுக்கு தேவை அவர்களுக்கும் அந்த உறுப்பினர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை குறிக்கும் ஒரு அரசு படிவம் மட்டுமே. அது இருந்தால் குடும்ப உறுப்பினர்களை இதில் எளிதாக சேர்த்துக் கொள்ள முடிகிறது.

இதற்காக உறுப்பினர்கள் திருமண சான்றிதழ், பாஸ்போர்ட், குடும்ப அட்டை போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வடிவங்களை வைத்து  அவருக்கும் குடும்பத் தலைவருக்கும் என்ன உறவு என்பதை பதிவிட்டால் போதும் அவர்களின் மொபைல் எண்ணிற்கு ஓடிபி ஒன்று வருகிறது. அதனை உறுதி செய்து விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இவை எதுவும் இல்லை என்றால் குடும்ப தலைவர்கள் ஒரு கடிதம் ஒன்றில் உறுப்பினர்களுக்கு தனக்கும் என்ன உறவு என்பதை கூறி அதனை பதிவு செய்ய முடியும். இதில் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் குடும்ப தலைவராக இருக்கலாம்.

 

இதில் பதிவு செய்வது எப்படி?

1. முதலில் மை ஆதார் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. அதன்பின் குடும்ப தலைவரின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் நாம் பதிவு செய்யும் எண் மட்டுமே நமக்கு திரையில் காட்டப்படுகிறது. வேறு எந்த ஒரு விவரங்களும் தனியுரிமை காரணமாக காட்டப்படாது.

3. நீங்கள் பதிவு செய்த எண் சரியாக இருந்தால் நீங்கள் சேர்க்க விரும்பும் உறுப்பினர்களுக்கு குடும்பத் தலைவருக்கும் என்ன தொடர்பு என்பது போன்ற வடிவங்களை கேட்கும் அதனை நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.

3. இதற்காக ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை அனைத்தையும் செய்து முடித்ததும் உங்களுக்கானSRN service number வழங்கப்படுகிறது. மேலும் இது குறித்து குடும்ப தலைவர் மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது.

4. அந்த மெசேஜ் கிடைத்தவுடன் குடும்ப தலைவராக இருக்கக்கூடிய நபர் 30 நாட்களுக்குள் மை ஆதார் இணையதளத்திற்கு சென்று இந்த விவரங்களை எல்லாம் சரி என சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் அந்த உறுப்பினரின் விவரங்கள் அனைத்தும் ஆதார் உள்ளே சேர்க்கப்படுகிறது.

5. இதற்கு குடும்பத் தலைவர் மறுப்பு தெரிவித்தால் விவரம் எதுவும் சேர்க்கப்படாமல் இது மூடிவிடும். மேலும் அவர் செலுத்திய ரூ.50 கட்டணம் மீண்டும் அவருக்கு கிடைக்காது