
உலகளவில் பல்வேறு பிராண்டுகளின் ஆணுறைகளில் இரசாயனம் பயன்படுத்தப்படுவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல பிராண்டுகளின் ஆணுறைகளில் இரசாயனம் பயன்படுத்துவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்படும் இரசாயனம் புற்றுநோயை உண்டாக்கக் கூடியதாகும் என்றனர். இந்த ஆய்வை மமாபேஷன் என்னும் நிறுவனம் மேற்கொண்டது.
அப்போது அவர்கள் இது போன்ற ஆணுறை பொருள்களில் ஃபுளோரைன் இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் குறிப்பிட்ட ஆணுறைகளில் இரு மடங்கு ஃபுளோரைன் சேர்ப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. இதில் மொத்தம் 29 ஆணுறைப் பொருள்களில் ஆய்வு செய்தனர். அதில் 6 பொருள்களில் 20% ஃபுளோரைன் இருப்பதாக கூறினர். இத்தகைய ஆணுரையை பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மனிதர்களின் பிறப்புறுப்பு மெல்லிய சருமம் உடையது. மேலும் இதில் ரத்த நாணங்கள் உள்ளதால் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களை சீக்கிரத்தில் உள்வாங்கிக் கொள்ளும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.