ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இதன் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதலில் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்த நிலையில், முதல் இன்னிசை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து விளையாடிய நிலையில் ஜெய்ஷ்வால் 81 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 31 ரன்களில் கேட்ச் அவுட் முறையில் ஆல் அவுட் ஆனார். பின்னர் அவர் பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்தபோது சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் எல்லை மீறி விமர்சனங்களை முன் வைத்தனர்.

ஏற்கனவே ஆஸ்திரேலியா ஊடகங்கள் விராட் கோலியை சரமாரியாக விமர்சித்து வரும் நிலையில் அவரை போட்டியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஐசிசியிடம் வலியுறுத்துகிறது. இந்த நிலையில் ஆஸி‌ ரசிகர்கள் எல்லை மீறி விமர்சித்ததால் கோபத்தில் விராட் கோலி திரும்பி வந்து அவர்களைப் பார்த்து முறைத்ததுடன் என்ன என்ன என்று கேட்டார். இதை பார்த்து அங்கிருந்த பாதுகாவலர் விராட் கோலியை சமாதானம் செய்து அனுப்பினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்திய ரசிகர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம்  தெரிவித்து விராட் கோலிக்கு ஆதரவாக பதிவிடுகிறார்கள்.