11 வயதில் தனக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக பாடகியும் நடிகையுமான ஆன்ட்ரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தனது தந்தையுடன் பேருந்தில் சென்ற போது டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்ததாகவும், அப்போது பயணி ஒருவர் தனது ஆடைக்குள் கையை விட்டதாகவும் கூறிய ஆண்ட்ரியா, இதைப் பற்றி யாரிடமும் அப்போது சொல்லவில்லை என தெரிவித்துள்ளார். இதற்கு சமுதாயத்தில் நான் வளர்ந்த விதம் அப்படி எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.