ஆடிக் கிருத்திகை திருவிழாவின் முக்கிய திருவிழாவான, ஆடிக் கிருத்திகை விழா, ஜூலை 29-ம் தேதி நடக்கிறது. அன்று இரவு ஆடிக் கிருத்திகை திருவிழாவின் முதல்நாள் தெப்பத் திருவிழாவும், 30-ம் தேதி 2-ம் நாள் தெப்பத் திருவிழாவும், 31-ம் தேதி 3-ம் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது. ஆடிக் கிருத்திகை திருவிழாவில், சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

இந்த நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 29ஆம் தேதி இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை திருப்போரூர், வல்லக்கோட்டை, வடபழனி, குன்றத்தூர், சிறுவாபுரி, கந்தசாமி கோவில் (பாரிமுனை) ஆகிய இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.