மும்பையில் Ola Cab ஒன்று விலைமதிப்பான ஆடி கார் மீது மோதியுள்ளது. ஆகஸ்ட் 18 அன்று நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. முன்னாள் சென்று கொண்டிருந்த ஆடி கார் நின்ற நிலையில் பின்னால் வந்த ஓலா கேப் ஆடி காரின் மீது மோதி விட்டது.

இதனால் ஆடி காரில் வந்த தம்பதி கோபமடைந்து ஓலா கேப் டிரைவரை கடுமையாக பேசியுள்ளனர். அதோடு ஆடி காரில் வந்த நபர் ஓலா டிரைவரை தாக்கி கீழே தூக்கி போட்டு உள்ளார். இதில் அந்த டிரைவர் சுயநினைவை இழந்துவிட்டார். வெகு நேரமாகியும் ஓலா டிரைவர் அசையாமல் இருந்ததை பார்த்த தம்பதி அவர்களது காரில் ஏறி அவ்விடத்தை விட்டு தப்பி விட்டனர்.

அதன் பிறகு ஓலா டிரைவர் மெதுவாக எழுந்திருப்பது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த காணொளி வைரலான நிலையில் அந்த தம்பதியின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.