மும்பையில் உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரோகித் சர்மா சிக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தனது விலை உயர்ந்த லம்போர்கினி காரில் பயணித்துக் கொண்டிருந்த ரோகித், போக்குவரத்து நெரிசலால் நிறுத்தி வைக்கப்பட்ட வேளையில், அருகில் இருந்த வாகனத்தில் பயணித்த ரசிகர் ஒருவர் அவரை வீடியோ எடுக்க முயற்சி செய்தார்.

அதை கவனித்த ரோகித் சர்மா, அவரை நோக்கி கையை உயர்த்தி சிரித்தபடியே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கிரிக்கெட் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருவதுடன், “தனக்கான அன்பை எளிமையாக ஏற்றுக்கொள்கிற வீரர்” என ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

“>