இந்தோனேசியாவில் மிகவும் அரிதாக 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இரட்டை குழந்தைகள் ஒட்டி பிறந்துள்ளனர். அதன்படி இந்த குழந்தைகள் ஒரே ஆண் குறியுடன் 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இந்த இரட்டை குழந்தைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் தற்போது இந்த செய்தியை பிரபல மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது. இதுபோன்ற குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதானது.

இந்நிலையில் இப்படி பிறக்கும் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது மிகவும் கடினம் என்பதால் ஒரு குழந்தை உயிரிழப்பதற்கே 60 சதவீதம் வரை வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது அந்த இரண்டு குழந்தைகளும் நலமுடன் இருப்பதோடு அறுவை சிகிச்சைக்கு பிறகு உட்காரவும் செய்கிறது. அதாவது 3 வருடங்கள் அமர முடியாமல் குழந்தைகள் தவித்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு அமர்ந்துள்ளனர். இந்த வகை குழந்தைகள் இசோபேகஸ் த்ரிபஸ் என்று அழைக்கப்படுகின்றனர். மேலும் இவர்கள் சிலந்தி இரட்டியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.