பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்தார் ஹிட்மேன் ரோஹித் சர்மா.

2023 ஆசியக் கோப்பை சூப்பர்4ல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான குழுப் போட்டியைத் தவிர, ஒவ்வொரு போட்டியிலும் ரோஹித் அரை சதம் அடித்துள்ளார், இந்த நேரத்தில் அவரது ஆக்ரோஷமாக பேட்டிங்கை   ரசிகர்கள் மிகவும் ரசித்துள்ளனர். குழு நிலைபோட்டியில் நேபாளத்திற்கு எதிராக 5 சிக்ஸர்கள் விளாசினார். சூப்பர்-4 போட்டியில், ஷாஹீன் அப்ரிடியின் முதல் ஓவரில் சிக்ஸர் அடித்து தனது அக்கவுண்டை ஓபன் செய்தார், ​​அதோடு நிற்காமல் ஷதாப் கான் ஓவரிலும் சிக்ஸர்களை பறக்க விட்டார். அந்த போட்டியில் மொத்தம் 4 சிக்ஸர்கள் விளாசினார். தொடர்ந்து அவர் இலங்கைக்கு எதிரான தனது அரை சதம் இன்னிங்ஸில் 2 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் ஷாஹித் அப்ரிடியின் பெரிய சாதனையை முறியடித்தார்.

இந்திய கேப்டன் ஒரு சிக்சருடன் 10 ஆயிரம் ஒருநாள் ரன்களை பூர்த்தி செய்தார் :

இலங்கைக்கு எதிராக இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில் உடன் இணைந்து அபாரமான தொடக்கத்தை வெளிப்படுத்தினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர். ரஜிதாவின் 7-வது ஓவரின் 5-வது பந்தை சிக்ஸருக்கு அடித்ததன் மூலம் ரோஹித் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 10 ஆயிரம் ரன்களை நிறைவு செய்தார், இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய உலகின் 2வது வேகமான பேட்ஸ்மேன் ஆனார். இது மட்டுமின்றி, இந்த மாபெரும் சாதனையின் நிழலில், அதிகம் பேசப்படாத ஒரு சாதனையையும் அவர் செய்து முடித்துள்ளார்.

ஷாகித் அப்ரிடியின் சாதனை முறியடிக்கப்பட்டது :

இது ஆசிய கோப்பை போட்டியில் அவர் அடித்த 27வது சிக்சர். இதன் மூலம் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்தார். ஆசிய கோப்பையில் அப்ரிடி தனது பெயரில் 26 சிக்ஸர்களை அடித்திருந்தார், அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 சிக்ஸர்கள் அடித்து ரோஹித் சர்மா இந்த சாதனையை சமன் செய்தார். இப்போது ஹிட்மேன் அப்ரிடியை பின்னுக்கு தள்ளினார். 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்த போது பத்திரனாவுக்கு எதிராக 2வது சிக்ஸரை அடித்ததால், ரோஹித் இப்போது 28 சிக்ஸர்களை அடித்துள்ளார். தொலைக்காட்சி விவாதங்களின் போது பாகிஸ்தான் நிபுணர்களால் அடிக்கடி விவாதிக்கப்பட்ட பதிவு இது.

ஆசிய கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் 5 பேட்ஸ்மேன்கள்

ரோஹித் சர்மா (இந்தியா) : 28 சிக்ஸர்கள்

ஷாஹித் அப்ரிடி (PAK) : 26 சிக்ஸர்கள்

சனத் ஜெயசூர்யா (SL) : 23 சிக்ஸர்கள்

சுரேஷ் ரெய்னா (IND) : 18 சிக்ஸர்கள்

முகமது நபி (AFG) : 13 சிக்ஸர்கள்

சவுரவ் கங்குலி (IND) : 13 சிக்சர்கள்

இந்தப் போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய துனித் வெலலகே ஆட்ட நாயகனாக தேர்வானார்.