தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இந்நிலையில் நயன்தாரா இன்று தன்னுடைய 40-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நயன்தாரா நடித்த ஆவணப்படம் நெட் பிளிக்ஸ் ஓடிடி களத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளிவந்துள்ளது.

அதன்படி இந்தப் படத்திற்கு ராக்காயி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை செந்தில் நல்லசாமி இயக்கும் நிலையில் கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் டைட்டில் டீசர் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.