
இந்தியாவின் இளம் வீரர் இஷான் கிஷன் மற்றும் முன்னாள் சர்வதேச அம்பையர் அனில் சௌத்ரி இடையேயான ஒரு நகைச்சுவையான உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் அரங்கேற்றிய appealing (அவுட் கோரிக்கை) பாணியில் ஏற்பட்ட மாற்றம் குறித்து அனில் சௌத்ரி பாராட்டு தெரிவித்த போது, இஷான் அதற்கான காரணத்தை நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும் போது “முன்பு போல மீதமின்றி appeal செய்வது தவறு. umpire-கள் இப்போது மிகவும் smart ஆகிவிட்டார்கள். ஒவ்வொரு முறையும் கூச்சலிட்டால், உண்மையிலேயே அவுட் ஆனா கூட not out கொடுப்பாங்க. அதனால், சரியான நேரத்தில் ஒரு முறை மட்டும் முறையிடுவது நல்லது,” என்று கூறிய இஷான், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானின் அளவுக்கு அதிகமான முறையீடு செய்வதாகவும் கேலியாக கூறினார்.
மேலும், அம்பையர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த இஷான் கிஷன், “சில அம்பையர்களை போட்டியில் பார்க்கும்போது நம்மால் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், புதியவர்களுக்கு இன்னும் தன்னம்பிக்கை தேவை. அவர்கள் முடிவெடுக்கும்போது பிறர் செல்வதைக் கேட்டோ அல்லது appeal காரணமாகவோ மயங்காமல், தாங்கள் உண்மையென்று நம்பும் தீர்ப்பை தைரியமாக கொடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் போன்று எல்லாவற்றுக்கும் முறையிட்டால் அவுட் கொடுக்க வேண்டியதற்கு கூட அவுட் கொடுக்காமல் போகலாம் என இஷான் கிஷன் கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram