
கர்நாடக மாநிலத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி நகரில் பீட்டர்- பிங்கி தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பின்கி 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என பீட்டரிடம் கேட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பீட்டர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயம் தேவாலயத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பீட்டரின் சகோதரர் ஜோயல் தனது தம்பி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவரது சடலத்திற்கு அருகே ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் அப்பா மன்னித்து விடுங்கள். பிங்கி என்னை மிகவும் துன்புறுத்துகிறார். அவள் என் மரணத்தை விரும்புகிறாள். என் மனைவியின் சித்திரவதையால் நான் இறந்து கொண்டிருக்கிறேன். அண்ணா தயவு செய்து பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பீட்டரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.