
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர்தான் சுகன்யா. பரதநாட்டிய கலைஞரான இவர் நடிப்பை தாண்டி நாட்டியத்தில் அதிக நாட்டம் கொண்டவர். முதன்முதலாக புது நெல்லு புது நாத்து படத்தின் மூலமாக அறிமுகமானார்.
இவர் முதல் படத்திலேயே பல விருதுகளை வாங்கியுள்ளார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்திருந்தார். சுகன்யா டப்பிங் கலைஞராகவும், சீரியலிலும் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் பல திறமைகளை வெளிக்காட்டிய இவருக்கு திருமண வாழ்க்கை நல்ல அமையவில்லை.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சுகன்யா,” தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கூறியுள்ளார். அதில் நானும் என் முன்னாள் கணவரும் ஒரு வருடம் கூட ஒன்றாக சேர்ந்து வாழ வில்லை. என்னுடைய அக்கா மகளை என் குழந்தை என்று கூறுகிறார்கள்.
நான் இது தொடர்பாக பலமுறை விளக்கம் கொடுத்துள்ளேன். ஆனால் தொடர்ந்து தவறாக எழுதி வந்தார்கள். இது காரணமாக ஒரு சேனல் மீது புகார் கொடுத்தேன். சமீபத்தில் தான் அந்த கேஸ் முடிவுக்கு வந்தது” என்று கூறியுள்ளார்.