நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள்.  இருவரும் தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.  படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கணவர் குறித்து பேசி உள்ளார் அதிதி ராவ். அதாவது அவரை திருமணம் செய்து கொள்ள நான் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை.

அவர் அப்படிப்பட்ட மனிதர் அல்ல. நல்ல மனிதர். அவரிடம் செயற்கையாக எதுவுமே இல்லை. அவர் மிகவும் அன்பானவர். எனக்கு நெருக்கமானவர் என ஒருவரை பற்றி தெரிந்தால் அவர்கள் எல்லோரையும் ஒன்றாக வர வைப்பர். அப்படித்தான் நான் வளர்ந்தேன். அது எனக்கு நிஜமாகவே பிடிக்கும். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமணத்தை முடித்துவிட்டு அதன் பிறகு நடிக்கலாம் என்று போய்விட்டே”ன் என்று கூறியுள்ளார்