உலக பொருளாதார மன்ற கூட்டம் 2023-ன் வருடாந்திர சிறப்பு கூட்டத்தில் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நியாயமான கிரகத்தை பாதுகாக்க கூடிய பூமி அமைப்பு எல்லைகள் கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஒரு சிறந்த ஆராய்ச்சியை சூழலியல் வல்லுநர்கள் வழங்கினர். இந்த விளக்க காட்சியை PIK இயக்குனர் ஜோகன் ராக்ஸ்ட்ரோம், ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய தெற்கில் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு பேராசிரியர் ஜோயீதா குப்தா, IHE டெல்ப்ட் இன்ஸ்டிடியூட் ஃபார் வாட்டர் எஜுகேஷன் ஆகியோர் வழங்கினர். இவர்கள் ஆர்க்டிக் சராசரி அளவை விட வேகமாக வெப்பமடைகிறது என்றும், கடல் பனி சுருங்கி வருகிறது என்றும் கூறினார்.

அதோடு 2050-ஆம் ஆண்டு முன்பனி இல்லாத ஆர்க்டிக் கோடை காலத்தை பார்க்கலாம் என்றும் தெரிவித்தனர். இது தவிர்க்க முடியாதது. அமேசான் காடுகள் பூமியில் உள்ள கார்பனை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தற்போது வறண்டு கார்பனை சேமிக்கும் திறனை இழந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் உலகப் பொருளாதாரம் மற்றும் நமது சமூகங்களை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் பாதுகாப்பான பூமி அமைப்புக்குள் செயல்படுவதில் உலக பொருளாதாரம் நம்முடைய வாழ்க்கையின் வணிக வாய்ப்பாகும் என்றும் தெரிவித்தனர்.