மத்திய பிரதேஷ் மாநிலம் சந்தர்ப்பூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது கணவரின் தம்பியுடன் வீட்டை விட்டு ஓடிப் போய் உள்ளார். இதற்கான காரணத்தை அந்த பெண் தனது கணவரிடம் ஒப்புக்கொண்டு உள்ளார். அதாவது தனது கணவர் அழகாக இல்லை என்றும் கணவனின் தம்பியான மைத்துனர் தான் அழகாக இருப்பதாகவும் தனக்கு அழகான குழந்தை வேண்டும் என்பதற்காக அவருடன் சென்றதாக ஒப்புக்கொண்டு உள்ளார்.

வீட்டிலிருந்து ஓடிப்போன அந்த பெண் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் தனக்கு ஏதாவது நேர்ந்தால் கணவரின் குடும்பம் தான் காரணம் என்றும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார் இதனால் அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து தான் மேற்குறிப்பிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.