
பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் வந்தபோது அவரைப் பார்க்க நினைத்து வந்த ரசிகை ரேவதி கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என்று காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை ஜாமினில் அல்லு அர்ஜுன் வெளியில் வந்தார். இந்நிலையில் முள்ளான் மந்திரியான ரோஜா அவர்கள் அல்லு அர்ஜுனின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“எந்த படமாக இருந்தாலும் நடிகர்கள் தங்கள் படத்தை விளம்பரப்படுத்த திரையரங்குக்கு செல்வது தொழில் பாரம்பரியம். இவ்வாறு இருக்க புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு சென்றது குற்றமாகுமா? அல்லு அர்ஜுனை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். தேசிய விருது பெற்ற ஒரு நடிகரை போலீசார் நடத்திய விதம் சரியல்ல” என்று ரோஜா கூறியுள்ளார்.