வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்க சுழற்சி இலங்கை மற்றும் தமிழக கடற் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து புயலாக வலுப்பெற்றால் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு பெங்கல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.