
சீனாவில் 8 வயது சிறுவன் அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரை ஒருநாள் போக்குவரத்து போலீசாக மாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனுக்கு போக்குவரத்து போலீஸ் போல தொப்பி அணிவித்து சாலையில் போக்குவரத்தை சரி செய்ய கற்றுக்கொடுத்து வாகனத்திலும் ஏற்றி சென்றுள்ளனர். இந்த செய்தி வெளியானதால் சிறுவனின் மருத்துவ செலவிற்கும் குடும்பத்திற்கும் உதவி செய்ய பலர் முன்வந்துள்ளனர்.