நாடு முழுவதும் ரேஷன் கடைகளில்   மூலமாக ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நாடு முழுவதும் இந்த மாதம் வரிசையாக பண்டிகை நாட்கள் வர இருக்கிறது. இதனால் பல மாநில அரசுகள் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு பண்டிகை கால பரிசுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதன் காரணமாக ரேஷன் கடைகளில் மக்கள் முன்கூட்டியே பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகியவற்றை போதுமான அளவுகளில் வைத்திருக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டிருக்கிறது. பற்றாக்குறை இருக்கக் கூடாது என்ற உத்தரவும் பறந்துள்ளது.