மத்திய பிரதேசம் மாநிலம் நர்மதாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தின் மீது பாம்பு ஒன்று விழுந்து மயங்கி கிடந்துள்ளது. அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த காவலர் ஒருவர் மயங்கி கிடந்த பாம்பை பார்த்து அதற்கு உயிர் காக்கும் சிகிச்சையாக பாம்பின் வாயோடு வாய் வைத்து ஊதி அதற்கு உயிர் கொடுத்தார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வைரலாக பரவிய நிலையில் அந்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதேநேரம் இதுபோன்று வேறு யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் பாம்பை கையாள தெரிந்தவர்களால் மட்டும்தான் இது போன்ற உயிர்காக்கும் சிகிச்சையே கொடுக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.