தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் ஊருக்குள் நடமாடும் அரிசிக் கொம்பன் யானையால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கடைகளில் புகுந்து அரிசியை விரும்பி உண்பதால் இந்த யானைக்கு அரிசிக் கொம்பன் என்ற பெயர் கிடைத்தது. கம்பம் நகருக்குள்  யானை உலா வருவது குறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, யானையை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றன.

நாளுக்கு நாள் பல கிலோமீட்டர் கடந்து அட்டகாசம் செய்து வரும் அரிசி கொம்பன் யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கிடையில்   யானையை படம் பிடிக்க பலர் துரத்துவதால் அது மிரண்டு ஓடுகிறது. இதனால் அரிசிக் கொம்பனை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.