
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பங்கூரா அரசு ஹாஸ்பிடலில் நடந்த ஒரு அவலம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 6 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவ உதவிக்கு யாரும் இல்லாததால் குழந்தையை கழிவறையில் பெற்றதாக அந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதோடு கர்ப்பிணி பெண்ணுக்கு கழிவறையில் பிறந்த குழந்தையை தெரு நாய் ஒன்று கவ்வி சென்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.