இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலும் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலும் இரண்டு தவணைகளாக அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதங்களில் ஏஐசிபிஐ குறியீட்டு தகவலின் படி அகலவிலைப்படி உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது 139.1% ஏஐசிபிஐ குறியீடு உள்ளது

. இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் பட்சத்தில் அகலவிலைப்படி 50% உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. அகல விலைப்படி உயர்வு அதிகரிக்கும் போது ஓய்வூதியதாரர்களின் மாதாந்திர ஓய்வூதியமும் சம்பளம் பெறுபவர்களின் அடிப்படை சம்பளமும் உயர்த்தப்பட உள்ளது. இந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு மார்ச் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. அகலவிலைப்படி உயர்வு மற்றும் நகரவில்லை நிவாரணம் வழங்குவதன் காரணமாக மத்திய அரசுக்கு 12857 கோடி கூடுதல் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.