புதுச்சேரி மாநிலத்தில் இதுவரையிலும் தனியாக பாடத்திட்டம் எதுவும் செயலில் இல்லை. தமிழக அரசின் பாடத்திட்டத்தை தான் அம்மாநில அரசும் பின்பற்றி வருகிறது. ஆனால் கடந்த வருடம் புதுச்சேரி அரசு தனியாக பாடத்திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் வரும் 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில்  10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் பாடத்திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கும் என்று கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாய பாடமாக இருக்கும். ஆனால் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் தமிழ் மொழி விருப்ப படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் . கல்வித்துறையின் இந்த அறிவிப்பு பெரும்பாலானவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.