GOAT படப்பிடிப்பு நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. விஜய், பிரபுதேவா, நான் என எல்லோரும் இணைந்து நடிப்பது சந்தோஷமாக உள்ளது. விஜய் கட்சி தொடங்கியதில் மகிழ்ச்சி, அவர் சாதிப்பாரா என்பதை மக்கள்தான் சொல்வார்கள் என கோவில்பட்டியில் நடிகர் பிரசாந்த் நற்பணி இயக்கம் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார்.

மேலும் நீங்க அரசியலுக்கு வர வாய்ப்புகள் உள்ளதா என கேட்ட கேள்விக்கு அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இப்போதைக்கு மக்களுக்கு நல்லது செய்யதான் வந்துள்ளேன் என கூறி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.