மணிகர்னிகா படத்திற்கு பிறகு சினிமாவில் தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் நடிகை கங்கனா ரனாவத் அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சமீபத்தில் கங்கனா ரனாவத் கிருஷ்ணர் ஆசீர்வதித்தால் அரசியலில் போட்டியிடுவேன் என கூறினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் நட்டா வரவேற்பு தெரிவித்திருந்தார். அவருக்கு பாஜக ஆதரவு கொடுக்கும் என்றும், வரும் எம்.பி தேர்தலில் மண்டி அல்லது மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.