கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டதை கண்டித்தும்,  அரசாணையை  திரும்பப் பெற்று  தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், கடந்த 3 நாட்களாக  செவிலியர்கள் சேலத்தில் ஒன்றுதிரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 4-வது நாளாக நேற்று விழுப்புரம் வந்த செவிலியர்கள் , மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த மாநில தலைவர் வீரராகவன் என்பவர் தலைமை தாங்கினார்.

மேலும் இதில் ஏராளமான செவிலியர்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, எங்கள் கோரிக்கையை அரசு பரிசீலித்து எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்டமாக நாங்கள் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என்று கூறியுள்ளனர்.