
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மோசடி நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளார் எஸ் எம் எஸ் இல், நீங்கள் மேற்கொள்ளாத டெபிட் பரிவர்த்தனைக்கு எஸ்எம்எஸ் வந்தால் யுபிஐ உட்பட அனைத்து டெபிட் முறைகளையும் உடனடியாக பிளாக் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் வங்கி கிளைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.