சேலம் மாவட்டத்தில் முள்ளுவாடி கேட்டை சேர்ந்த பாத்திமா என்ற 39 வயதுமிக்க பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். கணவரை இழந்த இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகனின் கல்லூரி படிப்பு செலவிற்காக தேவையான பணத்தை திரட்ட முடியாத காரணத்தால் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டால் அதன் பிறகு அரசு நிவாரணத் தொகை கிடைக்கும் என்று நினைத்து சேலம் பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பேருந்து வரும்போது பாத்திமா தானாகவே ஓடிச்சென்று பேருந்தின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விபத்து வழக்கு தற்போது தற்கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது..விபத்தில் சிக்கியவர்களுக்கு நீதிமன்றம் மூலமாக இழப்பீடு வழங்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.