
வேலூர் மாவட்டத்தில் உள்ள மாந்தோப்பு பகுதியில் ஜோசப் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் துப்புரவு பணியாளர்களின் பணிகளை மேற்பார்வையிடும் மேஸ்திரியாக பணிபுரிகிறார். இந்த நிலையில் ஜோசப் குமார் சாலையில் நடந்த சென்ற 11 வயது சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
அவரிடமிருந்து தப்பித்து ஓடி வந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜோசப் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.