
சென்னை பல்லாவரம் பகுதியில் சேர்ந்தவர் லாசர். இவரது மனைவி கௌசல்யா. இந்த தம்பதியினரின் மகள் அதே பகுதியில் இருக்கும் ஊராட்சி பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கௌசல்யா வேலைக்கு செல்லும் போது தனது மகளை பள்ளியில் விடுவது வழக்கம்.
சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமிக்கு பள்ளி விடுமுறை. இதனால் கௌசல்யா தனது மகளிடம் வீட்டு வேலை செய்து வைக்குமாறு அறிவுறுத்தி விட்டு வேலைக்கு சென்றார். ஆனால் மாலை நேரமாகியும் சிறுமி வீட்டில் வேலை செய்யாமல் இருந்ததாக தெரிகிறது.
இதனால் தனது தாய் அடிப்பாரோ என அச்சத்தில் சிறுமி தனது சகோதரர் கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தம்பி பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி வீட்டிற்கு வந்த பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.