
பாம்பு என்றாலே அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். பாம்பு என்றால் படையே நடக்கும் என்ற பழமொழி உண்டு இதற்கு காரணம் பாம்புகள் கொடிய விஷம் கொண்டதாக இருப்பது தான். ஆனால் சமீபகாலமாகவே வீடு மட்டுமல்லாமல், கார், டூவீலர் போன்ற வாகனங்களில் பாம்புகள் தஞ்சமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில், சிலர் கம்பை பயன்படுத்தி ஸ்கூட்டரின் சீட்டை தூக்க முயற்சிக்கிறார்கள். சீட்டை திறந்தவுடன் ஸ்கூட்டரின் பெட்ரோல் டேங்கில் சின்ன மலைப்பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டு இருந்தது. இதை பார்த்த இணையவாசிகள் அச்சரியத்தில் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.இந்த சம்பவத்தை தவிர இன்னும் பல சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டள்ளது.
View this post on Instagram