ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் முட்டையின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது அங்குள்ள மல்போரா என்ற  கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக நன்கொடை பெறும் போது முதியவர் ஒருவர் முட்டை கொடுத்தார். நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்களை பள்ளிவாசல் கமிட்டியினர் ஏலத்தில் விடப்பட்ட நிலையில் அந்த முட்டையை ஒருவர் 70 ஆயிரத்துக்கு விற்றுள்ளார்.

தொடர்ந்து ஏலம் விடப்பட்டதால் முட்டை விலை அதிகரித்து ரூ.2.25 லட்சத்தை தாண்டியுள்ளது. மொத்தம் ரூ.6 மதிப்புள்ள முட்டை ரூ.2,26,000க்கு ஏலத்தை முடித்ததாக குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.