
பிச்சை எடுப்பதை அவமானமாக நினைக்கும் பலரில் இவர் மிகவும் வித்தியாசமானவர். இவர் பெயர் பாரத் ஜெயின் (54). இவர் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தினம் தோறும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகில் 40 ஆண்டு காலமாக பிச்சை எடுக்கிறார். தினந்தோறும் 12 மணி நேரம் பிச்சை எடுத்தால் ரூபாய் 2500 வரை கிடைக்கும் என கூறுகிறார். ஒவ்வொரு மாதமும் 75 ஆயிரம் வரை வருமானம் கிடைப்பதாகவும் கூறுகிறார். பிச்சை எடுத்து சேமித்த பணத்தில் மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சொந்த வீடு வாங்கி உள்ளதாகவும் அந்த வீட்டில் தான் தற்பொழுது அவரது குடும்பம் வசித்து வருகிறது எனவும் கூறியுள்ளார். இது தவிர அவருக்கு இரண்டு கடைகள் உள்ளன அந்த கடைகளின் மூலம் மாதம் ரூ.30,000 வருமானம் கிடைக்கிறது.
அவரது இரண்டு குழந்தைகளுமே தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். ஆனாலும் பாரத் செயின் தற்போது வரை பிச்சை எடுத்து வருகிறார். ஜெய்னின் சொத்து மதிப்பு சுமார் 7 கோடி 50 லட்சம் ஆகும். இது குறித்து அவர் கூறியதாவது, நான் பேராசைக்காரன் அல்ல என்னால் முடிந்த அளவிற்கு கோவில்களுக்கும் தானம் கொடுக்கிறேன். என்னைப் போன்றே இந்தியாவில் சம்பாஜி காலே என்ற பிச்சைக்காரர் ரூபாய் 1 கோடியே 50 லட்சம் சொத்து மதிப்பு வைத்துள்ளார். லஷ்மி தாஸ் என்ற மற்றொரு பிச்சைக்காரரின் சொத்து மதிப்பு ரூபாய் 1 கோடி ஆகும்.”என்னை பார்த்தால் உங்களுக்கு வேலைக்கு செல்வதை விட பிச்சை எடுக்கலாம் என தோன்றலாம் . ஆனால் பிச்சை எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல ” என பாரத் செயின் கூறினார்.