கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவில் நிர்வாகத்தில் நடிகை குஷ்புவை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளனர். தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் நடிகை குஷ்பூ ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என இவருக்கு பன்முகம் உள்ளது.

தற்போது குஷ்பூ பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள நிலையில் இன்று கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விஷ்ணு மாயா கோவிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு நடிகை குஷ்புவுக்கு பாத பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் தற்போது அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.