
நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொத்தம் பத்து அணிகள் மோதுகின்றன. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியமாறன் இருக்கிறார். இவர் ஐபிஎல் தொடரில் வலிமையான அணிகளில் ஒன்றாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் இருக்கிறது. இந்த சீசனில் இந்த அணி ஆனது ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 286 ரன்கள் குவித்தது. இதற்கிடையில் இந்த அணியின் உரிமையாளர் காவியா மாறன் பயன்படுத்தும் கார்கள் குறித்த தகவல் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. அதாவது தன்னுடைய அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகளில் இடம்பெறும் காவியமாறன் தொடர்ந்து அவர்களை உற்சாகப்படுத்து வருகிறார்.
இந்நிலையில் இவர் பற்றிய செய்திகள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது அவர் பயன்படுத்தும் கார்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் காவ்யா மாறன் rolls royce, bently, ferrari மற்றும் BMW கார்களை அதிகம் பயன்படுத்துகிறார். இந்த நான்கு கார்களின் மதிப்பு சுமார் 25 கோடி ரூபாய் வரை இருக்குமாம். பென்ட்லி பென்டய்கா EWB மாடலின் விலை ரூ. 6 கோடி, ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டோம் EWB மாடலின் விலை அதிகபட்சமாக ரூ. 12 கோடி, பி.எம்.டபிள்யூ. ஐ7 கார் ரூ. 2.50 கோடி, ஃபெராரி ரோமா கார் ரூ. 3.75 கோடி என சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 கார்களை பயன்படுத்துகிறார்