
மும்பையில் பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சண்ட்க்கும் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் இந்திய பிரபலங்கள் மட்டும் இன்றி வெளிநாட்டு பிரபலங்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி மற்றும் மகள் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்த விழாவில் நடிகர் அமிதாப்பச்சனும் கலந்து கொண்டார்.
அப்போது நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் ரஜினி இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசிக்கொண்டனர். அந்த சமயத்தில் திடீரென ரஜினிகாந்த் நடிகர் அமிதாப் பச்சனின் காலில் விழுந்து வணங்க முயற்சித்தார். உடனடியாக அமிதாப்பச்சன் அவருடைய கையைப் பிடித்து அதை தடுத்து அவரை கட்டி அணைத்துக்கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர். மேலும் நடிகர் அமிதாபச்சன் மற்றும் ரஜினிகாந்த் வரும் கடந்த 32 வருடங்களுக்கு முன்னர் ஹம் என்ற படத்தில் சேர்ந்து நடித்த நிலையில் தற்போது வேட்டையன் என்ற படத்தில் ஒன்றாக நடித்து வருகிறார்கள்.
View this post on Instagram