அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியும் மற்றும் குடியரசு கட்சி மோத இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி வேட்பாளராக ட்ரம்பும் களமிறங்க இருக்கிறார்கள். இந்த தேர்தலை முன்னிட்டு முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பட்லர் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

இதில் அவருக்கு காதில் காயம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு படை வீரர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இதில் ஒரு பாதுகாப்பு படை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு அருகில் உள்ள மருத்துவமனையில் டிரம்ப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு google சிஇஓ சுந்தர் பிச்சை, முன்னாள் அதிபர் ஒபாமா, அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.