
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று தாக்குதல் நடந்துள்ளது. இதில், காதில் குண்டு பட்டதில் அவர் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, ரத்தம் கொட்ட ஆக்ரோஷமாக அவர் கோஷம் எழுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபரை அவரது சிறப்பு பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றது. மேலும் இதில் காயமடைந்த டிரம்ப் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் தற்போது நலமுடன் உள்ளார்.