அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக மீண்டும் அதிபர் ஜோ பைடன் களமிறங்குவதாக இருந்தது. அதன் பிறகு குடியரசு கட்சியின் தலைவராக டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார். அதோடு தனக்கு பதில் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்றும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கமலா ஹாரிஸ் அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அமெரிக்க அதிபராக ஜோ பைடனின் தலைமைக்கும், பல வருடங்களாக நம் நாட்டிற்காக அவர் ஆற்றிய சேவைகளுக்கும் அமெரிக்க மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் அதிபரின் ஒப்புதலை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் தேர்தலில் வெற்றி பெறுவதும் என்னுடைய நோக்கம் என்று பதிவிட்டுள்ளார்.