
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 81 வயதான அவர், மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு, காலில் ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை நடைபெற்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கேள்விப்பட்ட ரசிகர்கள், அவர் குணமடைய பிரார்த்திப்பதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.