தமிழக அரசு  பேருந்துகள் மூலமாக 1.8 கோடிக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்தார்கள். தமிழகத்தின் பல நகரங்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பண்டிகை காலங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் அக்டோபர் 14ஆம் தேதி மஹாளாய அமாவாசை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனை ஒட்டி  முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதற்காக பலரும் ராமேஸ்வரம் புறப்பட்டு செல்வார்கள். தமிழக மக்கள் இல்லாமல் வெளி மாநில மக்கள் வருகை புரிவார்கள். இதனால் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதும். இதனால் அக்டோபர் 13ஆம் தேதி அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர், ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  வழக்கம் போல் சிறப்பு பேருந்துகளில் பயணிக்க www.tnstc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், TNSTC Official App மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.