
தமிழக பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவின் ஒரு அங்கமாக உள்ள காஷ்மீரை பாதுகாத்து அதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதுகாப்பதற்காக எல்லையில் ராணுவ வீரர்கள் பாடுபடுகிறார்கள். அப்படி நாட்டுக்காக பாடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜரின் வாழ்க்கையையும் காதல் வாழ்க்கையையும் அழகாக ராஜ்குமார் பெரியசாமி படமாக இயக்கியுள்ளார்.
இந்த படம் தமிழக மக்களின் மனதை வென்ற நிலையில் சிலர் அவதூறாக சர்ச்சையை படத்துக்கு எதிராக பரப்புகிறார்கள். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராகவும் இராணுவத்துக்கு எதிராகவும் கூட சிலர் பேசுகிறார்கள். அமரன் திரைப்படத்தை பிரிவினைவாதம் என்ற நோக்கத்தில் சிலர் தவறான செய்திகளை பரப்புவதால் உடனடியாக இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசு தேசபக்தியை வலியுறுத்தும் படமாக அமரனுக்கு வரி விலக்கு வழங்க வேண்டும். மேலும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் திரையிடவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.