இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் துணை கேப்டன் ரிஷப் பந்த் மீண்டும் தனது அற்புதமான ஆட்டத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 58 பந்துகளில் 65 ரன்கள் என்ற வேகமான அரைசதம் அடித்த அவர், தனது பாரம்பரியமான விளையாட்டு பாணியை இன்னொரு முறை நிரூபித்தார்.

முதல் இன்னிங்ஸில் 25 ரன்கள் எடுத்த பந்த், இரண்டாவது இன்னிங்ஸில் தனது சக வீரர் ஷுப்மான் கில் உடன் 110 ரன்கள் கூட்டணியை அமைத்தார். பந்தின் பேட்டிங் நேரங்களில் அவர் வீசிய சில ஷாட்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தினபந்த் விளையாடிய ஷாட் காரணமாக அவரது பேட் கையிலிருந்து நழுவி விட்டது.

பின்னர் பைடர் கேமராவில் இந்த காட்சி பதிவாகியது, பந்த் பெவிலியன் செல்லும் போது, அவரது பேட்டை ஒருவர் எடுத்துக்கொண்டு அவரிடம் திருப்பி கொடுத்தார். இதுபோன்ற நிகழ்வு பந்துக்கு புதிதல்ல; அவரது பேட் கையிலிருந்து நழுவுவது தொடர்ந்து நடைபெறும் ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த போட்டியிலும் அவுட் ஆவதற்கு முன்பு அதேதான் மீண்டும் நடந்தது. ஒரு இந்த காட்சி ரசிகர்களை சிரிக்க வைத்தது.

8 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடித்து ஆட்டத்தை ஆட்டிப் படைத்த பந்த், ஷோயப் பஷீரின் பந்தில் அவுட் ஆனார். அவுட் ஆனதற்குப் பிறகும் அவர் பேட்டின் வழியாகவும், நடையில் காட்டிய வேடிக்கையான அசைவுகள் அவரது தனித்துவத்தை காட்டியது . பென் டக்கெட் அவர் விளாசிய பந்தை பிடித்து கேட்ச் எடுத்தாலும், பந்தின் காட்சி ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டது.

“>

 

மைதானத்தில் பந்த் இருக்கும் வரை, அவரது விக்கெட் கீப்பிங், பேட்டிங் மற்றும் பேச்சுப் பாணி எல்லாமே ரசிகர்களையும் எதிரணி வீரர்களையும் சிரிக்க வைத்தது. ஸ்டம்ப் மைக் மூலம் அவரது பேச்சுகள் பதிவாகி வந்தன. சில நேரங்களில் அவர் தனக்குள் பேசிக்கொண்டும், சில நேரங்களில் இங்கிலாந்து வீரர்களின் ஸ்லெட்ஜிங் முயற்சிக்கு வேடிக்கையான பதில்கள் அளித்ததும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பந்த் தனது விளையாட்டை சிரிக்க வைத்தாலும், அவர் ஆட்டத்தில் காட்டும் அதிரடி  இந்திய அணிக்காக மிகப்பெரும் பலமாக உள்ளது. ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அவர் காட்டும் புது பாணிகள் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களாக அமைகின்றன.