ஆந்திர மாநிலத்தில் சமீப காலமாக போக்குவரத்துக்கு போலீசார் சாலை விழிப்புணர்வுகள் தொடர்பாக வைக்கப்படும் விளம்பரங்கள் மிகவும் வித்தியாசமாகவும் மனதை தொடுவதாகவும் அமைந்துள்ளது. அந்த வகையில் தற்போது ஏலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக காவல்துறையினர் வைத்துள்ள விழிப்புணர்வு விளம்பரங்கள் மிகவும் மனதை தொடும் வகையில் அமைந்துள்ளது.

அதாவது ஒரு குழந்தையின் பேனர் போன்று வைத்து அதில் அப்பா பத்திரமாக வீட்டுக்கு வாருங்கள் என்று எழுதப்பட்டுள்ள வாசகம் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வாசகம் அந்த மாவட்டத்தில் 33 இடங்களில் வைக்கப்பட்ட நிலையில் மனதை தொடும் விதமாக அமைந்துள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் இந்த வாசகத்தை பார்த்தால் கண்டிப்பாக மெதுவாக செல்வார்கள் மற்றும் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பார்கள் என்ற நோக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.