கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே மேல் பட்டாம்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் அந்த பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிகளின் தாய் ஏற்கனவே இறந்து விட்டார். இருவரும் தந்தையுடன் வசித்து வந்தனர்.

கடந்த 18-ஆம் தேதி கல்லூரி மாணவியை அவரது தந்தை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இரண்டாவது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இரண்டு மாணவிகளும் கடலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.