
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17 வருடங்களுக்கு பிறகு நேற்று சென்னை அணியை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியிடம் சென்னை படுதோல்வியை சந்தித்தது. நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை பெங்களூர் அணியிடம் தோல்வியை சந்தித்த நிலையில் தோனி மீது விமர்சனங்கள் குவிகிறது. அதாவது தொடக்கம் முதலே சென்னை அணையின் வீரர்கள் சொதப்பிய நிலையில் சரியான நேரத்தில் களம் இறங்க வேண்டிய தோனி 9-வது இடத்தில் களமிறங்கியது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தோனி நேற்று நடந்த ஐபிஎல் போட்டி என்பது ஒரு மகத்தான சாதனையையும் செய்துள்ளார். நேற்று நடந்த போட்டியில் 16 பந்துகளில் தோனி 36 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் சென்னை அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை தோனி பெற்றுள்ளார். இதற்கு முன்பு சுரேஷ் ரெய்னா 176 போட்டிகளில் விளையாடி 4687 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அந்த சாதனையை தற்போது தோனி முறியடித்து 236 போட்டிகளில் 4697 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் அதாவது மூன்றாவது இடத்தில் பாப் 2 பிளெஸ்ஸிஸ் இருக்கிறார்.
சென்னை அணிக்காக 2721 குவித்துள்ள நிலையில் நான்காம் இடத்தில் கேப்டன் ருதுராஜ் இருக்கிறார். சென்னை அணிக்காக 2433 ரன்கள் குவித்துள்ளார். மேலும் நேற்று தோனி ஒன்பதாம் இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்த நிலையில் அணி தடுமாறிய போது அவர் களமிறங்கி பேட்டிங் செய்திருந்தால் சென்னை அணி தோல்வியை சந்தித்து இருந்தால் கூட ரசிகர்கள் சற்று நிம்மதியாகவாவது இருந்திருப்பார்கள் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.