
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 15ஆம் தேதி வெளியாகி
நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகைகள் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விக்ரம் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நிலையில் தங்கலான் படம் மாபெரும் வெற்றி பெற்றதால் தற்போது 2-ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோரும் சம்மதம் தெரிவித்து விட்டார்களாம். மேலும் இதனால் தங்கலான் 2 விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.