
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் அதனை தொடர்ந்து பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்றது. இந்த பாரா ஒலிம்பிக்ஸ் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் வரலாற்றில் முதல்முறையாக பாரா ஒலிம்பிக்சில் இந்திய அணியினர் 29 பதக்கங்களை வென்றுள்ளனர். அதன்படி இந்தியா 7 தங்கப்பதக்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 29 பதக்கங்களை வென்றுள்ளது.
இதனால் தற்போது பதக்க பட்டியலில் இந்தியா 18வது இடத்தில் இருக்கிறது. கடந்த பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா 19 பதக்கங்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில் இந்த முறை கூடுதலாக 10 பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் இதனால் பாரா ஒலிம்பிக்சில் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக 29 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.